ஆசிரியர்களின் நலன் பாதிக்காத வகையில் சம்பள நிலுவை தொகை வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய 1902 அரசு பள்ளி பாட ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கலந்துகொண்டு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்று சென்றனர். திருப்பூர் மாவட்டம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்97.45 விழுக்காடு பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு காரணமான தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற வைத்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வரும் நிதி சரியாக வந்து சேரவில்லை. ஒவ்வொரு நிதியும் கேட்டு வலியுறுத்தி ஒன்றிய அரசிடமிருந்து பெற முடிகிறது. சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி நிச்சயமாக இருக்கும் என்றும் மு. பெ. சாமிநாதன் தெரிவித்தார். முன்னதாக குண்ணங்கள் பாளையம் பகுதியில் தோட்டக்கலை துறை மற்றும் பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யவும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
