• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபருக்கு திடீர் வலிப்பு, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்…

ByKalamegam Viswanathan

Oct 4, 2024

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு கருப்புசாமி கோவில் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே திடீரென கீழே விழுந்ததில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் அங்கே உள்ள கருப்புசாமி கோவில் அருகே பூ பழம் விற்கும் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகே உள்ள சமூக ஆர்வலர் ஒருவரை அழைத்து, இதுபோன்று ஒருவர் கீழே விழுந்து தலையில் ரத்தம் கொட்டுகிறது என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்தனர். உடனடியாக அவர் 108 அவசர கால ஊர்தி தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த மதுரை காளவாசல் ஊர்தி முதலுதவி அழைத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலையில் சென்று கொண்டிருந்தவர் திடீரென கீழே விழுந்து ரத்தம் கொட்டியதை அப்பகுதி மக்கள் பார்த்து அச்சத்துடன் இருந்தனர். கீழே விழுந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை எனினும் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் அப்பகுதி முழுவதும் ரத்தமாகவே இருந்தது.