• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி…

BySeenu

Aug 30, 2024

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச் ராஜா, மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருங்கிணைத்துக் குழுவை ஏற்படுத்திய அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த மூன்று மாத காலங்கள் கட்சியில் ஏற்கனவே கட்சியில் உள்ள உறுப்பினர்கள் உறுப்பினர் சேர்ப்பு புதுப்பித்ததல் இயக்கமாக இருக்கப் போகிறது எனவும் குழுவில் முடிவு செய்து இருப்பது போல ஒரு பூத்திற்கு 200 பேர் சேர்க்கப்பட வேண்டும் ,ஆகவே தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதில் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டியது, கட்சியின் கட்டமைப்பு, கடந்த கால அனுபவத்தில் கட்டமைப்பு எங்கு நன்றாக இருக்கின்றதா அங்கு கட்சியின் பங்களிப்பு நன்றாக உள்ளது, ஆகவே இந்த காலகட்டம் அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்ற காலகட்டம் எனவும் அதை நோக்கி பாரதிய ஜனதா கட்சி 26 தேர்தலில் தமிழக மக்களின் அதிகாரத்தை பெறுவதற்காக ஆணையை பெறுவதற்காக ஒரு காலகட்டம் எனவும், அதற்கான பணி, கட்சியின் தலைமையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருக்கும் என தெரிவித்தார்

அரசியல் நிலவரத்தைப் பற்றி தான் முடிவு செய்ய முடியாது, அது அன்றாடம் மாறக்கூடிய விஷயம் என தெரிவித்த எச்.ராஜா, தங்களைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் ஒரே குறிக்கோள் 2026 தேர்தலில் எல்லா விதத்திலும் மக்களின் ஆணையை பெறுவதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் , சரியான உறுப்பினரை சேர்க்க வேண்டும் .அது துவங்குகின்ற காலகட்டம், அதை நாளை மறுநாள் துவங்குகிறது எனவும் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தென் சென்னை போன்ற பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் இருந்த குற்றச்சாட்டு, பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வேண்டுமென்றே வருட துவக்கத்தில் இருந்தவர்கள், கடைசியில் தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள்,ஆகவே இந்த காலகட்டத்தில் நாம் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்ப்பதோடு வாக்கு செலுத்த தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் அவர்களுடைய வாக்குகளை செலுத்தி உள்ளார்களா என தேர்தல் ஆணையம் சரிபார்த்து வருகிறது.அதனை சேர்த்து பார்ப்பதற்கான காலகட்டம் இது. அதில் எங்களுடைய கவனம் முழுமையாக இருக்கும் என தெரிவித்தார்.

தான் சொல்லும் வரை எந்த தனிநபரும் முடிவு எடுப்பதில்லை என தெரிவித்த எச்.ராஜா இதுவரை கூட 1991 ஆம் ஆண்டு முதல் நிர்வாகியாக இருந்து வருவதாகவும் அதிலும் 93லிருந்து மாநில செயலாளராக உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருவதாகவும்,அப்போது மையக் குழுவில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக இருபபதாகவும், ஆகவே மையக்குழுதான் முடிவு செய்யும் அதுவும் கூட்டணி விஷயங்கள் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தவர்,நேஷனல் பார்லிமென்ட் போர்டு தான் அதற்கான ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு, அண்ணாமலை இருந்தபோது ஒரு , அவர் இல்லாதபோது ஒரு முடிவு என கிடையாது எனவும் பாரதிய ஜனதா கட்சி முழுமையாக 2026 இல் மக்களின் ஆணையை பெறுவதற்கான பணியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம், அது கட்சி முழுமையாக எடுத்து இருக்கின்ற முடிவு என தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, நொண்டிக்குதிரைக்கு சறுக்குகின்றது சாக்கு என்று சொல்வார்கள்.அந்த மாதிரியாக அவர்கள் இஷ்டத்திற்கு பல்வேறு திட்டங்களிலே நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள் ,சென்ற 10 ஆண்டில் மட்டும், ஏற்கனவே பல முறை பிரதமர் , உள்துறை அமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறார்கள் எனவும் ஆகவே மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றது போல செய்து கொண்டிருக்கின்றது. எனவும் பெரிய திராவிட உருட்டு என்னவென்று சொன்னால் நாங்கள் கொடுக்கின்ற 100 ரூபாய்க்கு 29 ரூபாய் தான் கிடைக்கிறது, ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் கிடைக்கும் என்று சொல்வது, இதற்கு சரியான பதிலடி பாராளுமன்ற பட்ஜெட் உரையிலும் நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

காரணம் என்னவென்றால் ஜிஎஸ்டி வரி வருவாய் எடுத்தவுடன் 50 சதவீத வரி வசூல் டிஎன்ஜிஎஸ்சிடி செல்கிறது எனவும் ஆகவே அதிலும் நூறு ரூபாய் வரி கொடுத்திருக்கிறோம் 29 ரூபாய் என்பது அடிபட்டு போகின்றது, மத்திய அரசு கொடுத்திருக்கக்கூடிய 50 சதவீதத்தில் மத்திய அரசு ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மாநில அரசருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நிதி எனவும் இவையெல்லாம் திராவிட உருட்டு பொய் புரட்டு விமர்சித்தார்.

முதலில் 50% பெற்றுக் கொள்கிறீர்கள். அதன் பிறகு மீதி இருக்கும் 50 சதவீதத்தில் 42 சதவீதமும் மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது. எனவும் ஒரு ரூபாய்க்கு 71 நயா பைசாக்கள் உங்களுக்கு வந்து விடுகிறது, ஆனால் இன்றைக்கு மத்திய அரசின் வருட வருவாய் செலவினங்கள் என்பது 48.2 லட்சம் கோடியாகும், இதில் 11 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்கட்டமைப்பிற்காக செலப்படப்படுகிறது. எனவும் இது தவிர மற்ற வருவாய் செலவினங்களில் 15 லட்சம் கோடி குறிப்பாக முப்பது சதவீதம் உள்ளது. எனவும் வருவாய் மொத்த வருவாய் செலவினங்களுக்காக எவ்வளவு நீங்கள் செலவு செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியவர் அப்படி செலவு செய்ய வில்லை என்றால் வேலைவாய்ப்பு கிடைக்காது எனவும் மத்திய அரசுதான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என இவை அனைத்தையும் செலவு செய்கிறது, நாம் சாலை போடும்போது வேலைவாய்ப்பும் வருகிறதல்லவா, அதில் நம்ம ஊர் ஆட்களும் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது ,ஆகவே மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது,அதுமட்டுமல்ல நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தி மத்திய அரசாங்கம் எந்தவித செலவையும் எந்த ஒரு மாநிலத்திற்கும் செய்ய முடியாது எனவும் அவர்கள் கொடுத்துள்ள வழிகாட்டிகளை வைத்து தான் செய்ய முடியும்,விதிமுறைப்படி அவற்றை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு, நமக்கு ஏதாவது தேவை இருக்கின்றது என்றால் தாராளமாக மத்திய அரசை கேட்கலாம் ,ஆனால் கேட்கின்ற முறைப்படி கேட்க வேண்டும் என சாடினார்.

பிரதமர் , இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார், இதில் தமிழக பாஜக என்பது தனி அல்ல அகில இந்திய பாஜகவின் ஒரு அங்கம்,மூன்று லட்சம் கோடி ரூபாய் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் எனவும் எல்லா ரேஷன் கடைகளிலும் நியாயமாக முதலமைச்சரின் படம் போட்டு பைகளை கொடுக்கக் கூடாது என தெரிவித்தவர், கருணாநிதி அவர்களின் படம் போட்டு எல்லாம் கொடுக்கக் கூடாது. ஏன் ஒவ்வொரு நபர்களுக்கும் மாதம் 5 கிலோ அரிசியில் ஒரு கிலோ பருப்பும் மாநில அரசு கொடுக்கிறதா? இல்லை . இது நூறு சதவீதம் மத்திய அரசின் சப்சிட்டியில் தான் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போதே இவர்கள் என்ன செய்கிறார்கள், பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்து கொண்டால் அதற்கு இனிசியல் நான் போடுகிறேன் என்று பேசக்கூடாது எனவும் ஆகவே அந்த மாதிரியான ஒரு மனோபாவம் மாநில சர்க்கரிடம் இருக்கின்றது எனவும் அவர்கள் அதை மாற்றிக் கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன், இல்லையென்றால் மாற்ற வைப்போம் என தெரிவித்தார்.

நான் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய்ழ அது 100% பொய்.நான் விஜயை விமர்சிக்கவில்லை. அவர் அவரின் மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை ஏன் பாரதநாட்டில் ஏழைகளுக்கு அரசாங்க பள்ளிக்கூடத்தில் கல்வி இலவசம் இல்லை , நான் ஸ்டாலினின் மகன் நடத்தும் பள்ளிக்கூடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றால் லட்சம் ரூபாய் கட்ட வேண்டும், ஆனால் அரசு பள்ளிக்கூடத்தில் இலவசம் தானே, கல்வி இலவசம், மருத்துவம் இலவசம்., மலேசியா சிங்கப்பூரில் நினைத்தவுடன் அட்மிட் ஆக முடியுமா முடியாது, முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும் , ஆகவே அங்கே எல்லாம் இலவசம் இந்தியாவில் இலவசம் இல்லை என்று சொன்ன பொய்க்கு எதிராக தான் அறிக்கை கொடுத்தாகவும் தான் விஜய்க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை, அந்த படத்தில் சொல்லப்பட்ட பொய் ஒரு பொய்யை கதைக்காக சொன்ன விஷயத்தை நாங்கள் பஞ்சர் செய்துள்ளோம் அவ்வளவுதான் என தெரிவித்தார்.

ஆகவே விஜய் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே வாங்க என்று சொல்லிவிட்டேன், 18 வயது நிரம்பிய எவருக்கும் மக்கள் பணியாற்ற உரிமை உள்ளது. அதை அவர் செய்திருக்கிறார், கோவிலுக்கு போய் இருக்கிறார்.அதை வரவேற்பதாக அப்போது எச்.ராஜா தெரிவித்தார்.