• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தொழிற்கல்விச் சுற்றுலா

ByG.Suresh

Aug 30, 2024

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவர்கள்
இடைய மேலூரில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேயா சூரிய ஒளி ஆலைக்கு தொழில்கல்விச் சுற்றுலா சென்றனர்.

5 முதல் 12ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை கற்பிப்பதோடு தொழில்கல்வி அனுபவங்களையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு பள்ளி நிர்வாகத்தால் தொழில்கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகின்றது,

இதுகுறித்த பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது : “இன்றைய தொழில்கல்வி சுற்றுலா மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், குறிப்பாக சூரிய ஆற்றல் பற்றி விளக்கம் வழங்கவும், சூரிய ஆற்றல் உற்பத்தி மையம் ஒன்றின் செயல்பாடுகளை நேரில் காணவும் உதவியது.
இந்த சுற்றுப்பயணத்தில் சூரிய பலகைகள், இன்வெர்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை, ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் விநியோக இணைப்பு ஆகிய கட்டமைப்புகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

இன்று கொடுக்கப்பட்ட அனுபவம், பல மாணவர்களை விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான படிப்புகள் மற்றும் தொழில்களை எதிர்காலத்தில் தொடர ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இக்கல்விச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாலமுருகன் தலைமையில் மேலாளர் தியாகராசன், பள்ளி விளையாட்டு ஆசிரியர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.