• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மிச்சிகன் மாகாணத்தில் விமான விபத்து..!

Byமதி

Nov 15, 2021

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மேக்கினாவ் நகருக்கு மேற்கே உள்ள பீவர் தீவில் உள்ள விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.


இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 4 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் பயணித்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தின் கடலோர காவல்படையினர் இதனை தெரிவித்தனர்.


இந்த விமான விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.