• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அமெரிக்கா சீன அதிபர்கள் இன்று சந்திப்பு

Byமதி

Nov 15, 2021

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக தொலைபேசி வழியாக பேசினர். இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்துப் பேசுகின்றனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.