• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…

ByP.Thangapandi

Aug 26, 2024

உசிலம்பட்டி அருகே டிரான்ஸ்போர்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, இவர் டி.இராமநாதபுரம் துணை மின் நிலைய பணிகளையும் கூடுதலாக பார்த்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டி.இராமநாதபுரம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்போர்மரில் ஏற்பட்ட பழுதை நீக்க இன்று காலை டிரான்ஸ்போர்மரில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின் ஊழியர் பழனி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த டி.இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த மின் விபத்து தொடர்பாக போலீசாரும், மின் வாரிய அதிகாரிகளும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரான்ஸ்போர்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.