• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்

ByP.Thangapandi

Aug 25, 2024

உசிலம்பட்டியில் ஏழை ஜாதி ரசிகர் மன்றத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு வருகின்ற சூழலில் பொதுமக்களுக்கு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.,

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள பட்டறைத் தெருவில் ஏழை ஜாதி ரசிகர் மன்றத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் மேலும் இதனை ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஜாதி ரசிகர் மன்றத்தின் சார்பில் வழங்கி வருகின்றனர்.

இதில் தண்டபாணி, பால்பாண்டி, செல்வம், தங்கப்பாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.