• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மகிழ்ச்சியாக வாங்கிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

சிவகாசி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி மரியாதை நிமிர்த்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சிவகாசி வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதியதாக துவங்கவுள்ள நூலகத்திற்கு புதிய புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க அன்புடன் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புத்தகங்களையும், அதனை பாதுகாப்பாக வைத்திட இரண்டு புத்தக அலமாரியையும் உடனே வழங்கியுள்ளார்.

கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் என்பதை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உணர்த்தி கொண்டிருப்பது தான் சிறப்பு.