கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லுாரியில் பயிலும் பெண் பயிற்சி மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவத்திற்கு நாடு முழுதும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் மதுரையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் செந்தில் தலைமையில் பெண் மருத்துவர் கொடூர முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரின் கொலைக்கு முறையான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கிட வேண்டியும், இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு பணியறை வழங்கிட வேண்டியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் கோரிக்கைப் பதாகிகளை ஏந்தி கொண்டு 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.