• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விலங்குகள் என்றாலே மனிதருக்குள் ஒரு நேசம் எப்போதும் உண்டு.அது எவ்வகை உயிரினமாக இருந்தாலும் சரி.அப்படி கடவுளகாவும் நாம் வணங்கும் விலங்கு தான் யானை.இவை தனியாக இருந்தாலும் சரி கூட்டாக இருந்தாலும் சரி பீதி என்னவோ நமக்கு தான்.

ஆனால் கல்லுக்கும் ஈரம் என்று சொல்வார்கள் அப்படி ஒரு விஷயம் தான் கேரளாவில் நடிந்துள்ளது.யானைகள் கூட்டாக சாலையை கடக்க முயலும் போது வாகன ஓட்டிகள் அந்த யானை கூட்டத்துக்கு வழிவிட்டு நெகிழ்ந்த தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அப்படி சாலையை கடக்க முயலும்போது இறுதியாக சென்ற யானை தன் தும்பிக்கையால் சலாம் வைத்துவிட்டு சென்றது.

இது வாகன ஓட்டிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேர்ந்த காட்சி. இதை பார்த்தோருக்கு மெய்சிலிர்த்துவிட்டதுபோலும். விலங்காக இருந்தாலும் நன்றி என்ற ஒன்று இருப்பது சாத்தியம் என அந்த யானை நிருபித்துள்ளது.இந்த பதிவு மக்களிடையே புன்னகயை வப வைத்துள்ளது.