சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள செட்டி யூரணி தூர்வாரப்படமல் பல ஆண்டுகளான நிலையில் குப்பைகள் தேக்கம் அதிகரித்து காணப்பட்ட வந்த நிலையில் மழைக்காலங்களில் ஊரணியில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து காணப்பட்டது. இதனால் மழைநீரை சேமிக்கும் வகைகள் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி தூர்வாரப்பட்டு அங்கு நடைபாதை மின்விளக்கு போன்றவை அமைக்கப்பட்டிருந்தது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







