கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர்.மகேஷ் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது, இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக தமிழக சட்டப்பேரவை வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 10 அடி பாதைக்கும் குறைவான தொடர் கட்டிட குடியிருப்புகளுக்கு வீடு கட்ட கட்டிட அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாகர்கோவில் மாநகராட்சி 25வது வார்டு மாமன்ற உறுப்பினர். அக்சயா கண்ணன், சட்டசபையில் குரல் எழுப்பிய குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான. தளவாய்சுந்தரம் அவர்களுக்கு இவ் மாமன்றத்தின் வாயிலாக நன்றி தெரிவித்தார்.
