தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வெள்ளையன்,மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் என்ற ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன், மாநில பொருளாளர் பீர் முகமது ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்டத்தின் தலைவராக மகேந்திரகுமார், செயலாளராக எஸ்.பி.காமராஜ், பொருளாளராக சண்முகம்,ஆகியோரை இந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திருப்பத்தூரில் ஒரு வணிகர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தமிழ்நாடு முழுவதும் வணிகர்களை கொலை செய்துவது அதிகரித்துள்ளதால் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டி அதிகாரிகள், வணிகர்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் எனவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் தற்போது உயர்த்தியுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அதே போல கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணி செய்யக்கூடியவர்களின் ஆதார் டேட்டாவை தமிழக காவல்துறைக்கு கொடுக்க வேண்டும் எனவும் இதனை மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவித்த அவர் இதை அனைத்தையும் தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் தமிழக முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.








