• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேய்பிறை அஷ்டமி கோள்களில் சிறப்பு வழிபாடு

ByN.Ravi

Jul 28, 2024

மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோயில்களில் கால பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு பக்தர்கள் சார்பில், மஞ்சள்பொடி, பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலபைரவருக்கு, வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சணைகள் நடந்தது. மதுரை தாசில்தார் நகர் வர சித்தி விநாயகர் ஆலயம், கோமதி புரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயம், மதுரை அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று மாலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, வடமாலை அணிவிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் தேங்காயில் தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர்.
பக்தர்கள், கால பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு வடை மற்றும் தயிர் சாதங்கள் பிரசாதங்
களாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் செய்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சௌந்தர ராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள சொர்ண ஆகாச பைரவருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூமாலை அணிவித்து பைரவரை வழிபட்டனர்.