• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஊஞ்சாம்பட்டியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பதாக குற்றச்சாட்டு…

ByJeisriRam

Jul 24, 2024

தேனி மாவட்டம், ஊஞ்சாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதி கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் மேல் நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மணி நகர் பகுதியில் ஜல் ஜீவன் மிசன் சேமிப்பு, திட்ட நிதியிலிருந்து 2020- 2021 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர், பகுதிகளில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அன்னஞ்சி விளக்கு முதல் மணி நகர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து குண்டும், குழுயுமாக காணப்படுகிறது.

இதே போல் மணி நகர் பகுதியில் ஜல் ஜீவன் மிசன் சேமிப்பு, திட்ட நிதியிலிருந்து 2020- 2021 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.