காரைக்குடி செக்மேட் சதுரங்கக்கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு சதுரங்கப் போட்டிகள், அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
7வயதில் இருந்து 25 வயது வரை 5 பிரிவுகளாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் துவக்க விழாவிற்கு, மாவட்ட சஜரங்கக்கழகத் துணைத் தலைவர் சேவு. முந்துக்குமார் தலைமை தாங்கினார். செக்மேட் சாரங்கக் கழகத் தலைவர் M.ராமு வரவேற்றார். டாக்டர் அழகப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளையின் மேலாளர் காசி விஸ்வநாதன், அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மேலாளர் முதல்வர் நேரு, காரைக்குடி ஸ்டார்ஸ் அரிமா சங்கத்தின தலைவர் ஆனந்தி, மாவட்டச் சதுரங்கக் கழகச் செயலாளர் எம்.கண்ணன், பொருளாளர் AG. பிரகாஷ், கூடுதல் செயலாளர் ஜெ.பிரகாஷ் மணிமாறன். துணைப் பெருளாலர் சேவு. மனோகர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர், செக்கமட் சதுரங்கக் கழகச் செயலர் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். போட்டியின் 4002 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் மெடல் வழங்கப்பட்டது.
