• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

4 மாவட்டங்களில் நவ. 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

Byமதி

Nov 12, 2021

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(13.11.2021) பள்ளிகளுக்கும், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் பல பகுதிகளிலும், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

இதன் காரணமாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.