• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவில் ஆடிப்பெரும் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

ByN.Ravi

Jul 17, 2024

மதுரை, சோழவந்தான் பூக்குழி மைதானத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் பொதுமக்களுக்கு கூழ்ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆடி கடைசி வெள்ளி அன்று அக்னிச்சட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான முகூர்த்த கால் இன்று காலை நடப்பட்டு விழா தொடங்கப்பட்டது. இதில், சங்கங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், கண்ணதாசன், ராஜா , மருது, மாரி செல்வம், பூங்கொடி, கஸ்தூரி உள்பட பொது
மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.