கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று (15.07.2024) இரவு 10 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதை ஆற்றுக்கு திறந்து விடப்படுவதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய் பட்டணம் கடலில் சேர்வதால், கோதை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்பாடி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளின் அருகாமையில் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.






; ?>)
; ?>)
; ?>)
