• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதை..!

கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் பெரும் தலைவர் காமராஜரின் 122_வது பிறந்த நாள் கொண்டாட்டமாக தமிழக அரசின் சார்பில் மாலை மற்றும் மலர் தூவி காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளால் சார்பிலும்,காமராஜரின் 122_வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அவர் தெரிந்தே தான் சொல்கிறாரா.? தெரியாமல் சொல்கிறாரா.? என்பதை அவர் தான் விளக்கவேண்டும். தமிழக காவல்துறை அதன் விசாரணை நிலையில் சரியாகத்தான் சொல்கிறது. எதிர்கட்சிகளின் கருத்துக்களையும் மதிக்க கூடியவர் நம்முடைய முதல்வர். கடந்த கால ஆட்சியில் துப்பாக்கி சூட்டிற்கு அன்றைய முதல்வர் பத்திரிகை நண்பர்களிடம் சொன்ன பதில் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது, தமிழக மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில்களில் 13 இடங்களில் நடந்த தேர்தல்களில் ,11_தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்தார்.