இந்திய நாடாளுமன்றத்தின் 18 வது தேர்தலுக்கு பின், நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் தலைவர் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேரூராட்சி துணை தலைவி ஜென்ஸ் மைக்கேல், வார்ட் கவுன்சிலர்கள். சுபாஷ், மகேஷ், லிங்கேஸ்வரி,சுஜா, நித்தியா,ராயப்பன்,இந்திரா, வினிற்றா, சிவசுடலைமணி, இக்பால், சகாய சர்ஜினாள், பூலோகராஜா, ஆனிரோஸ், டெல்வின் ஜேக்கப் ஆட்லின் ஆகியோர் பங்கேற்றனர்.


நிகழ்வின் தொடக்கமாக துணை தலைவர் ஜென்ஸ் மைக்கேல் புதிதாக செயல் அலுவலராகப் பணி ஏற்றுள்ள ஜோஸ்லின் ராஜ்யை வரவேற்று வாழ்த்து தெரிவித்தவர் அடுத்து சொன்ன வரவேற்பு. மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள மோடிக்கு வாழ்த்து சொன்னது. திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புருவங்களை உயர்த்த செய்தது( பேரூராட்சி துணை தலைவர் தி மு க , கவுன்சிலர் என்பதை கடந்து,குமரி மாவட்டம் திமுக மகளிர் அமைப்பாளர்) சிறிது நேரம் அமைதியான சூழலை கலைத்தது அடுத்து கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்கள். அதில் அனைத்து கட்சி கவுன்சிலர்களின் முழு ஆதரவோடு நிறை வேறியது. கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் . தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் உள்ள நிலையில். காமராஜருடன் சிவாஜி கணேசன் இருக்கும் புகைப்படத்தை, எதிர் வரும் (ஜூலை _15)ம் நாளுக்குள் குறிப்பிட்ட படத்தை வைக்க மாவட்ட நிர்வாகம் முடி வெடுக்க வேண்டும் என தீர் மானத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர்.


காமராஜர் நினைவு மண்டபம் செய்தி மக்கள் துறையின் கீழ் உள்ள நிலையில். வருவாய் துறை, அல்லது பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை குறுகிய கால இடை வெளியில் நிறை வேற்றுமா.? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி இந்த தீர்மானத்தை இப்போது நிறை வேற்றியுள்ளது. ஆனால், அன்றைய தமிழக முதல்வர் பெரும் தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை திறந்து வைத்த நாள் முதல் காங்கிரஸ், சிவாஜியை நேசிக்கும் அன்பர்களின், பல்வேறு பொது நிலையினரின் கடந்த கால கோரிக்கை பேரூராட்சி தீர்மானத்தால் மேலும் வலுப்பெற்றுள்ளது.





