• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆா்ப்பாட்டம்

ByG.Suresh

Jul 5, 2024

சிவகங்கை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் சார்பில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி புதிய சட்டங்களாக தாக்கல் செய்துள்ளவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று சிவகங்கை வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றியும், மசோதாவில் பல்வேறு ஷரத்துகளை புதிதாக திணித்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.