• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வடமாநிலங்களிலிருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல்.., கோவை ரயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…

BySeenu

Jun 29, 2024

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் கோவை மாநகர போலீசார் ரயில்வே போலீசார் வட மாநிலத்திலிருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணித்த பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.

இதில் சுமார் 50 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பிடித்து வைத்துள்ள போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.