• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை புரோசோன் மாலில் 9-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்..,

BySeenu

Jul 17, 2026

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல வணிக வளாகமான புரோசோன் மால்’ (Prozone Mall) தனது 9-வது ஆண்டு விழாவை We Are Turning #9 என்ற பெயரில் வரும் ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை மக்களுடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மால் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இந்த விழாக்களைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நாட்களான ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் பொருட்களுக்கு 60% வரை அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு சலுகையாக, ₹5,999-க்கு மேல் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ₹500 மதிப்புள்ள பொருட்களும், ₹9,999-க்கு மேல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ₹1,000 மதிப்புள்ள மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் ‘ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட்’ -ல் இலவசமாக அள்ளிச் செல்ல சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

ஆண்டு விழா கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் பிரமாண்ட கேக் வெட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த கேக் வெட்டும் நிகழ்வானது கோவை மக்கள் முன்னிலையிலும், கோவை மக்களாலேயும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாபெரும் பலூன் டிராப் , லேசர் ஷோவுடன் கூடிய சாக்லேட் ஷவர் உள்ளிட்ட கண்கவர் நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.

இந்த 3 நாட்களும் ‘நியூஸ் 18’ (News 18) தொலைக்காட்சி நடத்தும் ‘தோரணமாயிரம்’ நிகழ்ச்சியின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், டிஜே பிளாக் (DJ Black)-ன் இசை இரவு மற்றும் ‘ஸ்டம்ப்ஸ் அண்ட் ஹம்ஸ்’ குழுவினரின் ‘சிங் அலாங்’ (Sing Along) உள்ளிட்ட அசத்தலான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புரோசோன் மால் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,
கோவை மக்கள் புரோசோன் மாலுடன் கொண்டுள்ள நினைவுகளின் நிமித்தமாகவும், கோவை மக்களின் குடும்ப விழாவாக இக்கொண்டாட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கிலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மக்கள் அனைவரும் இந்த குடும்ப விழாவில் பங்கேற்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி முற்றிலும் இலவசம்என்று கூறினர். இத்தகவலை புரோசோன் மால் நிர்வாகிகளான அம்ரிக் பனேசர் , முஸம்மில் , பிரிங்ஸ்டன் நாதன் , ஈஷ்வந்த் ராவ் மற்றும் சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.