• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மீனவர்கள், பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரண வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ByJeisriRam

Jun 29, 2024

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், மீனவர்களுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.