• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு

Byகுமார்

Jun 16, 2024

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை அவர் வழங்கினார். ஆற்றல் / எரிசக்தி, வரி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான செலவுகள் இந்நாட்டில் மருத்துவமனைகளை நிதிசார் நிலைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மீது இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்தியது. அத்துடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் கட்டணத்தில் 60% – க்கும் குறைவாக தற்போது இருந்து வரும் காப்பீடு தொகையை திரும்ப வழங்கும் முறையை அரசு மற்றும் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புகள் சீரமைப்பதற்கான தேவையையும் இக்கருத்தரங்கு வலியுறுத்தியது.
தரமான உடல்நல பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் வெளிப்படுத்தியிருக்கும் செயல் நேர்த்திக்காக பல்வேறு வகையினங்களின் கீழ் அனைத்து அளவுகளிலும் இயங்கி வரும் 15 மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு விருதுகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் வழங்கப்பட்டன. சென்னையில் இயங்கி வரும் ரேலா மருத்துவமனையின் நிறுவனர் 6000-க்கும் அதிகமான கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை படைத்திருக்கின்ற, உலகளவில் புகழ்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரான புரொஃபசர் முகமது ரேலா அவர்களுக்கு அபிகான் – ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மதுரை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடல்நல பிரச்சனைகள் காரணமாக அதிகரித்து வரும் பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள திறன்மிக்கவையாக தங்களையே மாற்றிக் கொள்வதற்கு இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரநிலை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக உலகளவில் நமது நாடான இந்தியா இருக்கிறது. இந்நாட்டில் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு பெரிய அளவில் பங்களிப்பை செய்யும் ஐந்தாவது துறையாக இருக்கும் சுகாதார பராமரிப்புத் துறையானது, சுற்றுச்சூழல் மீது தனது செயல்பாடுகளின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பதற்கு பருவநிலைக்கு உகந்த சுகாதார பராமரிப்பு சாதனங்களையும், திட்டங்களையும் வேகமாக நிறுவுவதும், செயல்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.” என்று இந்தியாவில் சுகாதார பராமரிப்பு வழங்குநர்களது சங்கத்தின் (AHPI) – ன் நிறுவனர் டாக்டர். அலெக்ஸாண்டர் தாமஸ் கூறினார் இக்கருத்தரங்கில் கருத்தாக்கம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை தமிழ்நாடு AHPI – ன் தலைவரும் மற்றும் தேவதாஸ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் – ன் துணைத்தலைவருமான டாக்டர். சதீஷ் தேவதாஸ் வழங்கினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கும் மற்றும் சமூகத்தின் நலவாழ்வுக்கு தரமான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கும் சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை மற்றும் நிதி ரீதியான வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளை உறுதியாக மருத்துவமனைகள் செயல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார். மின்சக்திக்கான கட்டண செலவுகளை குறைப்பது மற்றும் குறைவான விலை மற்றும் கட்டணத்தில் மருத்துவமனைகளை நிறுவுவதற்கான நிலத்தை வாங்கவும் மற்றும் நிதிஉதவியைப் பெறவும் தனியார் துறை மருத்துவமனைகளுக்கு உதவுவதில் அரசு முனைப்புடன் ஆதரவளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடையும் நோக்கத்தை எட்டவும் அரசின் இந்த ஆதரவு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இக்கருத்தரங்கில் AHPI – ன் தலைமை இயக்குனர் டாக்டர். கிரிதர் கியானி சிம்ஸ் மருத்துவமனையின் துணை தலைவரும் அபிகான் 2024 நிகழ்வின் அமைப்பு குழு தலைவருமான ராஜு சிவசாமி மற்றும் அபிகான் 2024 – ன் அமைப்புக் குழு செயலரும் மற்றும் ஆல்ஃபா கேர் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் நிறுவனர் & நிர்வாக இயக்குனருமான J. அடெல் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.