குமரி மாவட்டம். திருவட்டார் தாலுகா, ஆத்தூர் வருவாய் கிராமம் ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏற்றகோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக விதிமுறைகளை அப்பட்டமாக மீறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி கேன்சர் நோய் பரவி அப்பாவி உயிர்களை பலி வாங்கி வரும் அலுமினிய பாத்திர ஆலை மற்றும் அலுமினிய பாத்திரங்களுக்கு ஆசிட் ஏற்றும் தொழிற்சாலையை இழுத்து மூடி ஏழை எளிய அப்பாவி உயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேற்படி ஆலை உரிமையாளரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்து பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலயை மூட அறிவுறுத்தியும் ஆலையை மூடாமல் கண்மூடி வேடிக்கை பார்க்கும் குமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்களில் கருப்பு துணி கட்டி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஆர்ப்பாட்டத்தில் ஆலையை மூடக்கோரியம் திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.