விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழை பெய்யத் துவங்கியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலையிலிருந்தே இதமான வெயில் அடித்து வந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு மேல் மழை பெய்யத் துவங்கியுள்ளது. சாரல் மழையாக துவங்கிய நிலையில் இரவு மழை தொடர்ந்து பெய்தது. இதனால் வழக்கமாக 11.30 மணி வரை ஆள் நடமாட்டம் உள்ள ரதவீதி பகுதிகளில் 9.30 மணிக்கு வெறிச்சோடி காணப்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)