உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மூலிகை மரங்கள் நட்டு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ். பி. எம். நிறுவன தலைவர் அழகர்சாமி, ஜனசக்தி அமைப்பு தலைவர் சிவக்குமார். மனித பாதுகாப்பு கழக நிர்வாகிகள் முனீஸ்வரன், பிரின்ஸ், வழக்கறிஞர் செந்தில், சமூக ஆர்வலர் ஜெயக்குமார், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பொன்ராம் நன்றி கூறினார்.

