கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார்.
குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது அதில் அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம் என திமுகவினர் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.