• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்

ByP.Thangapandi

May 29, 2024

உசிலம்பட்டி அருகே பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவரை – சமூக ஆர்வலர் மற்றும் இளைஞர் குழுவினர் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி அருகில் உள்ள பேருந்து நிழற்கூடையில் குப்பையோடு குப்பையாக மனநலம் பாதிக்கப்பட்ட நபர் படுத்திருப்பதைக் கண்ட கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் தேனியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற மருந்தாளுனர், மனநலம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களை மீட்டு பெரியகுளம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவது குறித்து அறிந்து அவருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் இன்று பேருந்து நிழற்கூடையில் குப்பையோடு குப்பையாக வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை சமூக ஆர்வலர் ரஞ்சித்குமார், தொட்டப்பநயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, கிராம நிர்வாக உதவியாளர் மெய்யக்காள் மற்றும் எட்டு ஊர் இளைஞர் குழுவினர் இணைந்து அவரை மீட்டு முடி வெட்டிவிட்டு, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்துவிட்டு பெரியகுளம் மனநல காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.

பேருந்து நிழற்கூடையில் குப்பையோடு குப்பையாக கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு அவருக்கு புத்தாடை அணிவித்து, சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.