• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அ.புதுப்பட்டி கிராமத்தில் கோடைகால இலவச கபடி பயிற்சி

ByN.Ravi

May 19, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றன. இதில், அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி வட்டார மாணவர்களும் கலந்து கொண்டனர். மாநிலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டன. கலந்து கொண்ட மாணவர்களுக்கு அனைவருக்கும் பயிற்சி முடிவில் ஜெர்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை , அகில இந்திய பல்கலைக்கழக விளையாட்டு வீரர் மதுரை மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைச் செயலாளர் வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் பயிற்சி முடிவில் மதுரை மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் அகஸ்டின், துணைச் செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்
படுத்தினர் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.