• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆழ்ந்த நித்திரையில் உள்ளது திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

ByP.Thangapandi

May 15, 2024

வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, மருத்துவ முகாம் மற்றும் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

திமுக அரசு செயல்படாத அரசு என்பதற்கு உதாரணமாக நேற்று கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது., கொழுத்தும் வெயிலில் உயிரை இழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என தெரியவில்லை. அதற்கான நிவாரணமும் அரசு அறிவிக்கவில்லை.

இப்படியெல்லாம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதும் எடுக்காமல் தற்போது ஆழ்ந்த நித்திரையில் தூங்கி எழுந்த அரசாக இன்று கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

இன்று வெப்பசலனத்தால் ஏற்படுகின்ற தாக்கதை காப்பாற்றுங்கள் நடவடிக்கைகள் எடுங்கள் என சொன்னால் அவர்கள் உயிர் போன பின் காப்பாற்றுகிறோம், நடவடிக்கை எடுக்கிறோம் என சொல்கிற அரசை எந்த நிலையில் வைத்து பார்ப்பது என தெரியவில்லை.

ஜூன் மாதத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தற்போது மே மாதத்திலேயே துவங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெப்பசலனத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கிறோம் என சொன்னால் இந்த அரசை எப்படி பார்ப்பது.

கேரள, கர்நாடக மாநிலங்களின் மூலம் கிடைக்கும் உபரி நீர் தான் நமது அணைகளின் நீர்தேக்கத்தில் நீரை சேர்த்து வைக்க வாய்ப்பு கிடைக்கும். வடகிழக்கு பருவமழை நமக்கு முழுமையாக கிடைத்தாலும், தென்மேற்கு பருவமழையால் பக்கத்து மாநிலங்களில் மூலம் கிடைக்கும் உபரி நீரை சேமித்து வைத்தால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்., கடந்த ஆண்டு எதிர்பாத்த அளவு மழை இல்லாததால் 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அரசே அதற்கான திட்டங்களை அறிவித்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 300 கோடி ரூபாய் ஆணை பசிக்கு சோளபொரி போல அறிவித்தார்கள்.,

பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ள சூழலில் வெப்பசலனத்திற்காக நடவடிக்கைகளை எடுக்கிறோம் என சொல்லும் அரசு செயலிழந்த அரசு என்பதற்கு ஃமார்க் சான்றாக உள்ளது. திண்டுக்கல், துத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதையெல்லாம் இந்த அரசு கவணத்தில் எடுத்துள்ளதா என தெரியவில்லை.

செங்கலை காட்டி வாக்கு கேட்ட உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை கூட எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட எடுத்து வைக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டி முடிக்க எல்என்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, முதற்கட்டமாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உள்ளது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கட்டுமான பணிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு விரைவில் மதிப்பீட்டு ஆய்வு முடிவை வழங்கி பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்., செங்கலை காட்டி ஓட்டுக் கேட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த மூன்று ஆண்டுகாலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட எத்தனை செங்கலை எடுத்து வைத்துள்ளீர்கள் என இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மதுரை மக்களுக்கும் சொல்வதற்கு தயாரா என்பதை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடக மாநிலங்களில் தான் அதிகமான மழைப்பொழிவு இருக்கும், குறிப்பாக கேரளாவில் அதிகமழை இருக்கும், ஆகவே உபரி நீர் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது., அவ்வாறு வரும் உபரி நீரை நாம் முறையாக தூர்வாரி உபரிநீரை உயர்நீராக பாதுகாத்தோம் என்றால் தூய்மையான மழைநீர் நமக்கு வாழ்நாள் ஆதாரமாக அமையும் என்பது இந்த அரசுக்கும் தெரியும், அதை செயல்படுத்த வேண்டும்.

தற்போது 17 சதவீதம் தான் நீர் இருக்கிறது., 22 சதவீதம் இருக்க வேண்டும்., ஆகவே நீர் மேலாண்மையில் இந்த அரசு தோற்று போய் உள்ளது., 10 ஆயிரம் கோடியில் ஏரி, குளங்களை தூர்வாருவோம் என சொன்னார்கள் எத்தனை ஏரிகளை அவர்கள் தூர்வாரினார்கள் என தெரியவில்லை., 10 ஆயிரம் தடுப்பணைகளை உருவாக்குவோம் என சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யாத பத்தாம் பசிலியாக இந்த அரசு இருப்பதற்காக மக்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழை, நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான கோரிக்கை என பேட்டியளித்தார்.