புதுச்சேரியில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என வாட்ஸப் மூலம் ‘ஆப்’-களை அனுப்பி ஆன்லைன் வழியாக ரூ.1,68,000 பணத்தை மோசடி செய்து ஆப்பு வைத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என வாட்ஸப் மெசேஜ் ஒன்றை நம்பி குறிப்பிட்ட செயலி மூலம் 36,000 முதலீடு செய்து ஏமாந்துள்ளார். சூர்யா என்பவரும் இதே போன்று 71 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். இதேபோல் மேலும் 4 பேரிடம் ஆன்லைன் வாயிலாக பண மோசடி நடைபெற இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஆப்’ மூலம் ஆப்பு வைத்த மர்ம நபர்கள்
