வைகையில் தண்ணீர் திறந்து கோடைவெப்பத்தை தணித்து, குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ததற்கும் ,விவசாயிகளை மகிழ்வித்த தமிழக முதல்வருக்கும், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு, மக்களுக்கு வைகையில் தண்ணீர் திறந்ததற்க்காக கோடைவெப்பத்தை தணித்து, விவசாயிகளை மகிழ்வித்த தமிழக முதல்வருக்கும், மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் ,ஆகியோர்களுக்கு சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் நகர்மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் கூறும்போது,
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கோடைவெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் வெப்பசலனக்காற்று வீசியது. மக்கள் வெளியே செல்லமுடியாத அளவில் வெப்பக்காற்று வீசியது. தற்போது மழைபெய்கிறது. மேலும் வைகை ஆற்றில் வெள்ளமென தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து வருவதால் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகர் மக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு வைகை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நீராதாரம் உயர்ந்து விவசாயிகளை மகிழ்வித்துள்ளார். தமிழக முதல்வர் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.



