• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பரவையில் எடப்பாடியார் பிறந்தநாள் விழா..! முதியோர்களுக்கு அன்னதானம்

ByN.Ravi

May 14, 2024

மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர்ராஜூ ஆலோசனையின் பேரில்,
பரவை பேரூர் அ.தி.மு.க சார்பாககழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழாவையொட்டி, பரவை மில் காலனி ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் பரவை சி. ராஜா தலைமை தாங்கினார். நாகமலை, செளந்தரபாண்டியன், ஜெயராஜ், முத்துபாண்டி, பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் செபஸ்தியம்மாள் அருள் பிரகாசம் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் கலா மீனா ராஜா அன்னதானம் வழங்கினார். இதில், செந்தில், மனோஜ், சரவணன், தங்கவேல் ராசு,ராஜ்குமார், சீனி, முத்துநாயகம் உட்பட ஏராளமான அண்ணா திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.