• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Byமதி

Nov 9, 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 10 தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்திருக்கிறார்.

இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் கனமழையால் இதுவரையில் 350 கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1300 குளங்கள் மற்றும் கண்மாய்கள் 99 சதவீதம் நிறைந்துள்ளது.