• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு – தீவிர பரிசோதனைக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி.

BySeenu

May 5, 2024

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாநகரில் மொத்தம் 13 மையங்களில் 6500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.பிற்பகல் 2 மணி அளவில் நீட் தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வினை எழுத வரும் மாணவர்களை தீவிரமாக பரிசோதனை செய்த பின்பு காவலர்கள் தேர்வு எழுத அனுமதித்து வருகின்றனர்.
ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் மாணவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தேர்வு எழுத வரும் பெண்கள் காதணி, செயின் உள்ளிட்ட நகைகளைseஅணிவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த விதமான மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையங்களின் வாசலில் காவல்துறையினர் மாணவ, மாணவிகளை தீவிரமாக பரிசோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்து வருகின்றனர்.