• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை மேலூர் வட்டார பாரம்பரிய அம்பலக்காரர் பட்டமளிப்பு விழா:

ByN.Ravi

May 3, 2024

வெள்ளரி பட்டி அம்பலகாராக விரகனூர் ரகுராமராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தங்களுக்கு கீழ் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களும், அவர்களுக்கு கீழ் ஜமின், மிராசுதாரர்களின் ஆட்சி நடைபெற்றது.
அதில், மேலூர், வெள்ளியங்குன்றம், கள்ளந்திரி, வெள்ளலூர், வள்ளாலபட்டி, போன்ற ஊர்களில் கிராம தலைவராக, தங்கள் சமூக பாதுகாவலராக அம்பல காரர் பட்டம் வழங்கும் நிகழ்சி நடைபெறும்.
பழமையும், பாரம்பரியமும் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் விதமாக கிராம மூத்த வாரிசுகளுக்கு அம்பலகாரர் பட்டம் வழங்கப்படும்.
அம்பலகாரர் பட்டம் ஏற்ற பின் அவர் ஒரு நீதிபதியாக தன்னை சார்ந்தவர்களுக்கும் தனது கிராமத்தில் உள்ள பிற சமூகத்தினருக்கும், பாதுகாவலராகவும் செயல்படுவார்.
கோயில் விழாக்கள், இல்ல விழாக்கள், பஞ்சாயத்து தீர்ப்புகள் தனது ஊர் சார்பாக மற்ற ஊர்களில் நடைபெறும் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே தலைமை பொறுப்பு ஏற்கும் அம்பலகாரர் விருப்பு வெறுப்புகளின்றி, தன் நலமில்லாமல் செயல்படும் பொறுப்பே “அம்பலகாரர் பட்டம் “இதில், மேலூர் வட்டம் மத்தம் நாடு வெள்ளரிபட்டி கிராமத்தில் அழகச்சியார் வகையறா அம்பலகாரர்களுக்கு, பாத்தியப்பட்ட அம்பலகாரர் பட்டத்திற்கு விரகனூர் மூக்குசாமி அம்பலம் மகன் ரகுராமராஜன் (வயது 64). என்பவர் இன்று வெள்ளரி பட்டியில் 4-வது கரை அம்பலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.