• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம்

ByI.Sekar

Apr 28, 2024
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம், தயிர், குங்குமம் , சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, தீப ஆராதனை காட்டப்பட்டது. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று பெண்கள் பொங்கல் வைத்து தங்கள் நேற்று கடனை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஊரை வலம் வந்து, பால்குடம் எடுத்தும், காவடி, தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.