• Fri. Dec 13th, 2024

நிலக்கடலையில் ஏற்படும் இலை சுருட்டுபுழுவை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

ByI.Sekar

Apr 28, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது பல ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலைக்கு என்று மருத்துவ குணமும் ,பயிர் செய்வதற்கு நல்ல லாபமும் கிடைப்பதால், பலரும் நிலக்கடலையை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலக்கடலையில் இலை சுருட்டு புழு தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவி ஹேமமாலினி ஊரக வேளாண் அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் மறவபட்டி என்னும் கிராமத்தில் நிலக்கடலையில் வரும் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த சுண்ணாம்பை தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார் .இந்த செயல் விளக்கம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.