• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜெர்மனியில் தரைமட்டமான பழங்கால பாலம் !

Byகாயத்ரி

Nov 9, 2021

ஜெர்மனியின் வைஸ்பேடன் நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சல்ஸ்பச்டல் எனும் நெடுஞ்சாலை பாலம்.தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் ரோலர் தாங்கி பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பாதுகாப்புக் காரணங்களால் ஜூன் 2020-ல் மூடப்பட்டது.


இதனையடுத்து, பழுதடைந்த பாலத்தை தகர்த்து விட்டு அங்கு புதிய பாலத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது.பாலத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்படுவதற்கு முன்பே, அதனைச் சுற்றி 250 மீட்டர் எல்லைக்குள் இருந்து சுமார் 140 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.பல மாதங்கள் திட்டமிட்டு, பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ரயில் பாதைகள் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் அருகிலுள்ள 750 துளைகள் போட்டு இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகளுக்காக தேடப்பட்டன.


இங்கு புதிய பாலம் கட்டப்படுவதற்கு முன், தொழிலாளர்கள் முதலில் சுமார் 15,000 டன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கெனெவே கட்டமைப்பின் தெற்குப் பகுதி தயாரான நிலையில், 2023-ம் ஆண்டு வரை பாலம் முழுவதுமாக திறக்கப்படாது, ஒட்டுமொத்தமாக 2026-ம் ஆண்டு இந்த கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.