• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாX 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்!

Byஜெ.துரை

Apr 20, 2024

’தில் அவுர் ஃபேம்’ எனும் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்க 21 கவர்ச்சியான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை இந்திய ரசிகர்களின் இதய ராணி சன்னி லியோனும் இதய ராஜா தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏகப்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

ஓடிடி ரசிகர்கள் ஜியோ டிவியில் இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியை இந்த முறை தமிழ் மொழியிலும் கண்டு ரசிக்க முடியும்.

தினுசு தினுசாக கவர்ச்சி உடைகளை கலக்கலாக அணிந்து கொண்டு ரசிகர்களை சுண்டி இழுக்கக் கூடிய உர்ஃபி ஜாவேத் இந்த சீசனிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த களமிறங்கி உள்ளார். மேலும், எக்ஸ் ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்களுடன் அவர் அடிக்கப் போகும் லூட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத்தின் என்ட்ரியே இந்த சீசனில் அதிரடியாக இடம்பெற்றிருந்தது. தனது ஆரம்ப ஆட்டத்தையே தந்திரமாக விளையாடி இஷிதாவின் என்ட்ரியை கலகலப்பாக்கி விட்டார் உர்ஃபி ஜாவேத்.

தந்திரமான விளையாட்டின் மூலம் ஒவ்வொரு போட்டியாளர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். திக்விஜய் மற்றும் உனாட்டியின் தொடர்பு உள்ளிட்டவை பொறாமையை உருவாக்கி நிகழ்ச்சியின் டென்ஷனையும் இஷ்டத்துக்கு எகிற வைத்திருக்கிறது.

இந்த வில்லாவில் மலரும் புதிய காதல்களும், சிலருக்கு ஏற்படும் சங்கடங்களும், பொறாமை, கோபம் உள்ளிட்ட மனித உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்து வரும் நிலையில், நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு அறுசுவையான உணவை பரிமாறும் உணர்வை கொடுக்கிறது.

ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழகி காதலை வளர்ப்பது, பின்னர் பிரேக்கப் ஆகி பிரிவது, இன்னொருவருடன் உறவை வளர்ப்பது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் இதுவரை இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 களைகட்டி வருகிறது.

த்ரில்லர் படம் போல பல திருப்பங்களுடன் ரோலர் கோஸ்டர் ரைடு போல இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5

எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சென்றுக் கொண்டிருக்கிறது. காதல், பாசம், பிரிவு, மோதல் என மனிதர்களின் உறவுகள் மேம்பட்டு தெரியும் இந்த ரியாலிட்டி ஷோவை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.