• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்

Byவிஷா

Apr 17, 2024

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை முதல் 20ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல் மதுபான கடைகளுக்கும், கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.