• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

BySeenu

Apr 15, 2024

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையானது 3″கார்களில் வந்த 10″ க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை. வீட்டில் இருந்த கார், அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.