• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் மின்னனு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணி: இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

ByG.Ranjan

Apr 11, 2024

காரியாபட்டியில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இராமநாத புரம் தொகுதிக் குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 270 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்கு சாவடி மையங் களுக்கு அனுப்பும் வாக்கு பதிவு இயந்திரங் கள் காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளது. தேர்தலில் வாக்கு பதிவிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணிகள் நேற்று நடை பெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சின்னம் பொருத்தும் பணிகளை தேர்தல் உதவி அலுவலர் ரமேஷ மேற்பார்வை யில் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டு சின்னங்களை பொருத்து வருகின்றனர்.