• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஏப்ரல் 19 அன்று திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை

Byவிஷா

Apr 10, 2024
ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க பணியாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாராளுமன்ற ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.