• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது. காரைக்குடியில் தேர்தல் பரப்புரையின் போது ப.சிதம்பரம் பேச்சு.

ByG.Suresh

Apr 1, 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்புரை மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார். மேலும், ஒரே நாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ப.சிதம்பரம், வட மாநிலங்களையும், தென் மாநிலங்களையும் பிரித்திருப்பது கொள்கை போராட்டங்கள்தான் என்றும், தென்னாடுகள் என்பது வெறி பேச்சுக்கள்,கலவர பேச்சுக்கள் இல்லாத ஜனநாயக பூமி என்றும் கூறினார்.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை போல், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தால் பல லட்சம் குழந்தைகள் உணவு அருந்துகிறார்கள் என்றவர், திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி நான் உரிமையோடு கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்கிறேன் என்று பேசினார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், முதலமைச்சர்களை கைது செய்வது, அமைச்சர்களை கைது செய்வது என்பது சினிமாவில் கூட வந்தது கிடையாது, எந்த நாட்டிலும் இந்த விபரீதங்கள், பயங்கரவாதங்கள் நடப்பதில்லை இன்று வேதனை தெரிவித்தவர்,
அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது காமராஜ் என்றும்,கல்விக் கடன் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி என்று மார்தட்டி சொல்லுவோம் என்றும் கூறினார்.