• Mon. Apr 29th, 2024

எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு தான் – நரிக்குறவர் இன மக்கள் உணர்ச்சி பொங்க வரவேற்பு

ByG.Suresh

Apr 1, 2024

கார்த்திக் சிதம்பரத்தை பார்க்க வேண்டும் என்றால் பாஸ்போர்ட் எடுத்து லண்டனுக்கு தான் போக வேண்டும்- வேட்பாளர் சேவியர் தாஸ் பேச்சு.

கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த வேட்பாளரான சேவியர் தாஸை , ஆரத்தி எடுத்து வரவேற்ற இஸ்லாமிய பெண்கள்!!!*

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் அமைந்துள்ள தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று தனது பிரச்சாரத்தைக் தொடங்கினார். அப்பொழுது கோவிலுக்கு வெளியே இருந்த நரிக்குறவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். இவரைப் பார்த்த நரிக்குறவ இன மக்கள் உற்சாகமாக, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கு தான் என்று உற்சாகமாக கோஷமிட்டனர். அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் தொடர்ச்சியாக சீராத்தகுடி , கண்ணமங்கலம், அரணையூர், சாலை கிராமம் ,குமார குறிச்சி உள்ளிட்ட இளையான்குடி கிழக்கு வடக்கு தெற்கு ஒன்றியத்தின் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது சீராத்தங்குடி கிராமத்தில் மக்களிடம் வேட்பாளர் சேவியர் தாஸ் பேசியபோது,

எப்போதாவது நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு, பொதுமக்கள் அவர்கள் பார்த்ததில்லை என்றனர்,
அவரை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் எடுத்து லண்டன் போய்தான் பார்க்க வேண்டும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று விடுவார். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் அவர்களுக்கு ஏழு முறை ப.சிதம்பரம் குடும்பத்திறகு வாய்ப்பளித்து விட்டீர்கள் எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் வாக்கு சேகரித்தார் இதனைத் தொடர்ந்து அருகே உள்ள சோது குடி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம் சக வேட்பாளரான சேவியர் தசை யார் என்றே தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியிருந்தார்.

ஆனால் இன்று வேட்பாளர் சேவியர் தாஸிடம் கார்த்திக் சிதம்பரத்தை தாங்கள் பார்த்ததில்லை, அவர் யார் என்றே தெரியாது என்று கூறியது மக்கள் கார்த்திக் சிதம்பரத்துக்கு அளிக்கப் போகும் சாட்டை அடியின் முன்னோட்டமாக தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *